/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மண்டபம் வீட்டில் முடங்கிய ஏ.டி.ஜி.பி.,மண்டபம் வீட்டில் முடங்கிய ஏ.டி.ஜி.பி.,
மண்டபம் வீட்டில் முடங்கிய ஏ.டி.ஜி.பி.,
மண்டபம் வீட்டில் முடங்கிய ஏ.டி.ஜி.பி.,
மண்டபம் வீட்டில் முடங்கிய ஏ.டி.ஜி.பி.,
ADDED : ஜூலை 27, 2011 03:31 AM
மண்டபம்:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாம் சிறப்பு அதிகாரியும், ஏ.டி.ஜி.பி.,யான ஜாபர் சேட் சென்னை வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய போது, ஜாபர் சேட் அலுவலகம் செல்லாமல் மண்டபம் வீட்டில் முடங்கி கிடந்தார்.
தி.மு.க.,ஆட்சியில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ஜாபர்சேட். அ.தி.மு.க., ஆட்சி வந்தவுடன் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மண்டபம் சேதுரஸ்தா முதல் தெருவில் உள்ள பேரூராட்சி மூன்றாவது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ராஜா என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.சென்னையில் உள்ள இவரது வீட்டில் போலீசார், நேற்று சோதனை நடத்தினர். இதையடுத்து மண்டபத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடக்கலாம் என காலை 9.30 மணி முதல் பத்திரிகையாளர்கள் குழுமினர்.மதியம் 1 மணிக்கு அங்கு காவலுக்கு இருந்த போலீஸ்காரர், 'ஐயா, சென்னையில் உள்ளார்' என தெரிவித்தார். ஆனால், உளவுத்துறையினர் மண்டபம் வீட்டுக்குள் தான் ஜாபர்சேட் உள்ளார் என உறுதியாக கூறினர்.காலை 10.30 மணிக்கு வழக்கம் போல, மண்டபம் 'கேம்ப்' அலுவலகத்திற்கு ஜாபர்சேட் பத்திரிகையாளர்களை தவிர்ப்பதற்காக நேற்று அலுவலகம் செல்லவில்லை. அலுவலகத்தில் உள்ள பைல்களை வீட்டுக்குள் கொண்டு வர சொன்னார். இவரிடம் மொபைல்போனில் தொடர்பு கொண்டபோது: இந்த விசயத்தில் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. நீங்கள் என்னை சந்திப்பதற்காக காத்திருக்க வேண்டாம். பேட்டி கொடுப்பதாக இல்லை. புறப்பட்டு செல்லுங்கள், என்றார்.பத்திரிகையாளர்கள் போட்டோ எடுப்பதை தடுக்கும் வகையில், நேற்று மதியம் 2.20க்கு மண்டபம் வீட்டிற்கு கார் வேகமாக வந்தது. வீட்டின் கேட் திறக்கப்பட்டு உடனே ஜாபர்சேட் ஒடி வந்து காரில் ஏறி கதவை சாத்திக்கொண்டார். இதன் பின் கார் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.