/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/குழப்பத்தை ஏற்படுத்தவே நில அபகரிப்பு வழக்குதி.மு.க., மத்திய இணை அமைச்சர் ஆவேசம்குழப்பத்தை ஏற்படுத்தவே நில அபகரிப்பு வழக்குதி.மு.க., மத்திய இணை அமைச்சர் ஆவேசம்
குழப்பத்தை ஏற்படுத்தவே நில அபகரிப்பு வழக்குதி.மு.க., மத்திய இணை அமைச்சர் ஆவேசம்
குழப்பத்தை ஏற்படுத்தவே நில அபகரிப்பு வழக்குதி.மு.க., மத்திய இணை அமைச்சர் ஆவேசம்
குழப்பத்தை ஏற்படுத்தவே நில அபகரிப்பு வழக்குதி.மு.க., மத்திய இணை அமைச்சர் ஆவேசம்
ADDED : ஜூலை 17, 2011 02:06 AM
நாமக்கல்: ''தி.மு.க.,வில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே,
நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்படுகிறது,'' என, மத்திய இணை அமைச்சர்
காந்திச்செல்வன் பேசினார்.மாவட்ட தி.மு.க., வக்கீல் அணி ஆலோசனை கூட்டம்,
நாமக்கல்லில் நடந்தது. வக்கீல் அறிவழகன் வரவேற்றார். முன்னாள் துணை
சபாநாயகர் துரைசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னுசாமி, மாவட்ட அவைத்தலைவர்
தாண்டவன், துணைச் செயலார் பார் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளரும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சருமான காந்திச்செல்வன் தலைமை வகித்து பேசியதாவது:
கடந்த சட்டசபை தேர்தலில் எதிர்பாராத விதமாக தி.மு.க., தோல்வியை
சந்தித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், ரியல் எஸ்டேட் தொழிலில், 10
சதவீதம் பேர் மட்டுமே தி.மு.க.,வினர், 90 சதவீதம் பேர் அ.தி.மு.க.,வை
சேர்ந்தவர்கள். தி.மு.க.,வினர் மீது தினமும் ஒரு பொய்யான வழக்கை பதிவு
செய்து மாயையை உருவாக்கி வருகின்றனர்.ஏதாவது புகார் வருமா? என போலீஸாரும்
எதிர்பார்த்திருக்கும் சூழ்நிலையும் உள்ளது. அதை வைத்து தி.மு.க.,வை
நசுக்கிவிடலாம் என நினைக்கின்றனர். தி.மு.க.,வில் குழப்பத்தை ஏற்படுத்த
வேண்டும் என்பதற்காகவே, நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்படுகிறது. கழக
வக்கீல்கள் முன்னின்று தோழர்களை காக்கவேண்டும். வழக்குகளை அனைத்தையும்
ஒற்றுமையாக இருந்து எதிர்கொள்ள வேண்டும்.தி.மு.க., மீது நில அபகரிப்பு
வழக்கு பதிவு செய்து, பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர். தி.மு.க.,
தலைவர் கருணாநிதியை போல் இனிமேல் யாராலும் திட்டத்தை அறிவிக்க முடியாது.
மக்களுக்கு அதை கொண்டு சேர்க்கவும் முடியாது. மீண்டும் தமிழக முதல்வராக
கருணாநிதி வருவதை யாராலும் தடுக்க முடியாது.இவ்வாறு அவர்
பேசினார்.நிகழ்ச்சியில், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், வக்கீல் அணி
நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.