/உள்ளூர் செய்திகள்/தேனி/விளையாட்டு மைதானம் நகராட்சி நிர்வாகம் முன்வருமா..விளையாட்டு மைதானம் நகராட்சி நிர்வாகம் முன்வருமா..
விளையாட்டு மைதானம் நகராட்சி நிர்வாகம் முன்வருமா..
விளையாட்டு மைதானம் நகராட்சி நிர்வாகம் முன்வருமா..
விளையாட்டு மைதானம் நகராட்சி நிர்வாகம் முன்வருமா..
ADDED : ஆக 18, 2011 12:00 AM
பெரியகுளம் : பெரியகுளம் தீயணைப்புநிலையம் குடியிருப்பு பின்புறம் விளையாட்டு மைதானம் அமைத்து தருவதற்கு நகராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும்.
பெரியகுளம் பட்டாளம்மன்கோயில் தெரு, செயின்ட்சேவியர் தெரு உட்பட பத்துக்கும் அதிகமான தெருவில் 28, 29 மற்றும் 30 வது வார்டுகள் உள்ளன.
இங்குள்ள வாலிபர்கள் உடற்பயிற்சி செய்ய நியூகிரவுண்ட் செல்லவேண்டியுள்ளது. பழைய ஆடு அடிக்கும் தொட்டி பகுதியில் 10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் இடம் உள்ளது. இங்குள்ள களைச் செடிகளை அகற்றி, புதிதாக விளையாட்டு கருவிகளை வாங்குவதற்கு நகராட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் விளையாட்டு மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட இடம் சீரமைக்கவில்லை. இங்குள்ள இளைஞர் அமைப்பினர் நகராட்சி நிர்வாத்திடம் விளையாட்டு மைதானம் அமைத்து தருவதற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


