ADDED : செப் 16, 2011 02:49 AM
கோவை:சிறைக் கைதியிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல்
செய்யப்பட்டு,வழக்குப்பதிவு செய்யப்பட்டது.ஈரோடு,
பட்டிமணியகாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன்(எ)சங்கர்(40).
மரணம்
ஏற்படும் எனத் தெரிந்தும் விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு,
கோவை மத்திய சிறை டவர் பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார்.நேற்று காலை 6.00
மணிக்கு, வார்டன்கள் இப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கைதி சங்கர்,
சிறைக்குள் தடை செய்யப்பட்ட மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தது
கண்டுபிடிக்கப்பட்டு,பறிமுதல் செய்யப்பட்டது.இதுதொடர்பாக சிறை அதிகாரி
சங்கர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு
செய்து விசாரிக்கின்றனர்.


