ADDED : செப் 20, 2011 09:12 PM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த சொரையப்பட்டு கிராமத்தில் நாளை (22ம்தேதி) மனு நீதிநாள் முகாம் நடக்கிறது.
முகாமிற்கு டி.ஆர்.ஓ., வெங்கடாசலம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதில் பட்டா மாற்றம், முதியோர், மாற்று திறனாளிகள், ஆதரவற்ற விவசாயக் கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட பிரிவினர் நலத்திட்ட உதவிகள் பெற கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு தாசில்தார் பார்வதி தெரிவித்துள்ளார்.