/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பட்டுச்செடி வளர்த்தால் விமானத்தில் சிட்டாய் பறக்கலாம்!பழங்குடியினருக்கு கலெக்டர் அறிவுரைபட்டுச்செடி வளர்த்தால் விமானத்தில் சிட்டாய் பறக்கலாம்!பழங்குடியினருக்கு கலெக்டர் அறிவுரை
பட்டுச்செடி வளர்த்தால் விமானத்தில் சிட்டாய் பறக்கலாம்!பழங்குடியினருக்கு கலெக்டர் அறிவுரை
பட்டுச்செடி வளர்த்தால் விமானத்தில் சிட்டாய் பறக்கலாம்!பழங்குடியினருக்கு கலெக்டர் அறிவுரை
பட்டுச்செடி வளர்த்தால் விமானத்தில் சிட்டாய் பறக்கலாம்!பழங்குடியினருக்கு கலெக்டர் அறிவுரை
ADDED : ஆக 14, 2011 10:50 PM
மேட்டுப்பாளையம் : ''பட்டுச்செடி வளர்த்தால், சிட்டாய் விமானத்தில் பறக்கலாம்,'' என, மாவட்ட கலெக்டர் கருணாகரன் பேசினார்.
பில்லூர் அணை அருகே அத்திக்கடவு பகுதியில் மாவட்ட வருவாய்த்துறையும், வனத்துறையும் இணைந்து மலைவாழ் மக்களுக்கு ஜாதிச் சான்று வழங்கும் விழாவை நடத்தின. விழாவிற்கு தலைமை வகித்து, கலெக்டர் கருணாகரன் பேசியதாவது: ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், அவர்களின் பொருளாதார வளர்ச்சி மேன்மை அடையவும் அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளன. ஆனாலும், இந்த உதவித்தொகையும், பல்வேறு சலுகைகளும் எல்லா மக்களுக்கும் சமமாகப் போய்ச் சேர்வதில்லை. அவை சீராக வழங்க உள்ளாட்சி நிர்வாகத்துக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் வாழும் மக்கள் நம்மால் என்ன செய்ய முடியும் என்று இருக்கக் கூடாது. நீங்கள் பட்டுச்செடியை வளர்த்தால், ஏராளமான வருவாய் கிடைக்கும்; அதன்பின், சிட்டு போல் விமானத்தில் பறக்கலாம். பட்டுச் செடியை யானைகள் மற்றும் வன விலங்குகள் சாப்பிடாது. ஒரு ஏக்கரில் பயிர் செய்தால் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும். எனவே, பட்டுச் செடியை வளர்க்க பழங்குடியினர் முன் வரவேண்டும். உங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பது அதிமுக்கியம். நீங்கள் ஜாதிச்சான்று வாங்க வரும்போது, உண்மையான விபரங்களைத் தெரிவிக்க வேண்டும். பழங்குடியினர்க்கு உதவுவதற்கு உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு, கீழுள்ள அதிகாரிகள் காத்திருக்க வேண்டியதில்லை. இத்தகைய நிகழ்ச்சிகளில், அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் அருமைதாஸ், கோவை ஆர்.டி.ஒ., சாந்தகுமார், வெள்ளியங்காடு ஊராட்சி தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் பேசினர். தோலம்பாளையம், வெள்ளியங்காடு, கெம்மாரம்பாளையம், நெல்லித்துறை ஆகிய 4 ஊராட்சிகளை சேர்ந்த 54 மலைவாழ் மக்களுக்கு ஜாதிச் சான்றுகள் வழங்கப்பட்டன. ரேஷன் கார்டு, ஜாதிச் சான்று, வீட்டு மனை பட்டா, ரோடு வசதி ஆகியவை கேட்டு 176 பேர் மனுக்கள் கொடுத்தனர்.காரமடை ரேஞ்சர் தேசப்பன், சிறப்பு திட்ட ரேஞ்சர் முத்தையா, கெம்மாரம்பாளையம் ஊராட்சி தலைவர் வெள்ளிங்கிரி, நெல்லித்துறை தலைவர் சக்திவேல், கவுன்சிலர்கள் மற்றும் மலைவாழ் மக்கள், வனத்துறையினர், வருவாய்த் துறையினர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். மாவட்ட வன அலுவலர் திருநாவுக்கரசு வரவேற்றார்; மேட்டுப்பாளையம் தாசில்தார் மோகனராஜன் நன்றி கூறினார்.