ADDED : ஆக 22, 2011 12:28 AM
விழுப்புரம் : விழுப்புரம் நகர காங்., சார்பில் மூப்பனார் பிறந்த நாள் விழா
கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் நகர காங்., தலைவர் குலாம்மொய்தீன் தலைமையில்
காந்தி மற்றும் ராஜிவ் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். நிர்வாகிகள் காஜா,
சுந்தர், ரகுநாதன், வாசுதேவன், அகமது முன்னிலை வகித்தனர். முன்னாள்
கவுன்சிலர் செல்வராஜ் வரவேற்றார். அரசு சிறுவர் பள்ளியில் மாணவர்களுக்கு
இனிப்பு வழங்கப்பட்டது. இதில் வக்கீல் தயானந்தம், முன்னாள் கவுன்சிலர்
ராமதாஸ், இளைஞர் காங்., ரமேஷ், நிர்வாகிகள் ஆறுமுகம், சங்கர், ரபி,
ஜெயந்தி, கீதா, ராமச்சந்திரன், தன்சிங், ஆனந்தன் கலந்து கொண்டனர். பாபாஜி
நன்றி கூறினார். அன்ன தானம்: மூப்பனார் பிறந்த நாளையொட்டி காங்., சார்பில்
விழுப்புரம் ஜெயின்ட் ஜான் ஊனமுற்றோர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு
காலை உணவு வழங்கினர். நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர்
தசரதன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர்
உடனிருந்தனர்.