/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தர முடிவுகொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தர முடிவு
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தர முடிவு
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தர முடிவு
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தர முடிவு
ADDED : அக் 15, 2011 02:05 AM
கோவை : உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சி
வேட்பாளர்களை ஆதரிப்பதென, கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் மாநகரக்
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மாநில தலைமை நிலையச் செயலாளர் அக்னி
ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில்,
பதவியேற்ற நான்கு மாதங்களில் அ.தி.மு.க., அரசு பல நல்ல திட்டங்களை விரைவாக
செயல்படுத்தி வருவதால், உள்ளாட்சித் தேர்தலில், அ.தி. மு.க., மற்றும் அதன்
கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரிப்பது மற்றும் அவர்களின்
வெற்றிக்காக கொங்கு வேளாளாக் கவுண்டர்கள் பேரவையினர் பாடுபடுவது என்று
முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க., வின் மேயர் வேட்பாளர்
வேலுச்சாமிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாநில தலைவர் மணிக்கவுண்டர், மாநில நிர்வாகிகள்
நாச்சிமுத்துகவுண்டர், தாமோதிரன், சுப்பிரமணியம், மணிமேகலை, பிரேம்குமார்,
செந்தில்வேல், லட்சுமணன், வேலுச்சாமி, கிருபாகார்த்தி, முத்துசாமி,
சிவக்குமார், மோகன்குமார், மோகன்ராஜ், மருதாசலம், பொன்னுசாமி உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


