அ.தி.மு.க., தேர்தல் பணிக்குழு திருத்தியமைப்பு
அ.தி.மு.க., தேர்தல் பணிக்குழு திருத்தியமைப்பு
அ.தி.மு.க., தேர்தல் பணிக்குழு திருத்தியமைப்பு
ADDED : செப் 27, 2011 12:59 AM
சென்னை: திருச்சி சட்டசபை இடைத்தேர்தல் பணிகளுக்காக, அ.தி.மு.க., சார்பில் அறிவிக்கப்பட்ட தேர்தல் பணிக்குழு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அ.தி.மு.க., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மேற்கு சட்டபை தொகுதிக்கான இடைத்தேர்தல், அக்.,13ம் தேதி நடக்கிறது.
அதில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள, அமைக்கப்பட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களில் திருத்தம் செய்யப்படுகிறது. நிதித்துறை அமைச்சர் பன்னீர் செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்துறை அமைச்சர் விசுவநாதன், உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி, வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திரா, கைத்தறித் துறை அமைச்சர் ரமணா, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சிவபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் முஹமத் ஜான், சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலர் அன்வர்ராஜா, இலக்கிய அணிச் செயலர் வைகைச் செல்வன் உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக, நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.