/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/புதுகை அருகே டூவீலரில் சென்றவரை வழிமறித்து ரூ.70 ஆயிரம் கொள்ளைபுதுகை அருகே டூவீலரில் சென்றவரை வழிமறித்து ரூ.70 ஆயிரம் கொள்ளை
புதுகை அருகே டூவீலரில் சென்றவரை வழிமறித்து ரூ.70 ஆயிரம் கொள்ளை
புதுகை அருகே டூவீலரில் சென்றவரை வழிமறித்து ரூ.70 ஆயிரம் கொள்ளை
புதுகை அருகே டூவீலரில் சென்றவரை வழிமறித்து ரூ.70 ஆயிரம் கொள்ளை
ADDED : ஜூலை 21, 2011 02:35 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே டூ வீலரில் சென்ற மொபைல்ஃபோன் ரீசார்ஜ் கார்டு ஏஜன்ட் ஒருவரை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த வாலிபர்கள் இரண்டுபேர் அவரிடமிருந்து 70 ஆயிரம் ரூபாயை பறித்துச்சென்ற துணிகர சம்பவம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்தவர் அருண்குமார்(32). இவர் கீரனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மொபைல்ஃபோன் ரீ சார்ஜ் கார்டுகளை மொத்தமாக விற்பனை செய்துவருகிறார். நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் வசூல் செய்த தொகையுடன் அருண்குமார் தனது ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் டூவீலரில் கீரனூர் திரும்பிக் கொண்டிருந்தார். களமாவூர் ரயில்வே கேட் அருகே இவரை திடீரென்று வழிமறித்த இரண்டு வாலிபர்கள் அரிவாளைக் காட்டி மிரட்டியதோடு அவரிடமிருந்து ஹேன்ட் பேக்கை பறித்துள்ளனர். பின்னர் பேக்கில் இருந்த 70 ஆயிரம் பணத்தை பறித்துவிட்டு அடையாளம் தெரியாத டூவீலரில் தப்பிச்சென்றனர். இந்த துணிகர சம்பவம் குறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.


