/உள்ளூர் செய்திகள்/திருச்சி/சி.ஐ.டி.யு., பேரணி 1,000 பேர் பங்கேற்புசி.ஐ.டி.யு., பேரணி 1,000 பேர் பங்கேற்பு
சி.ஐ.டி.யு., பேரணி 1,000 பேர் பங்கேற்பு
சி.ஐ.டி.யு., பேரணி 1,000 பேர் பங்கேற்பு
சி.ஐ.டி.யு., பேரணி 1,000 பேர் பங்கேற்பு
ADDED : ஜூலை 21, 2011 02:43 AM
திருச்சி: திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., அமைப்பினர் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திருச்சி மாவட்ட சி.ஐ.டி.யு., அமைப்பின் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் பங்கேற்ற பேரணி நேற்று காலை நடந்தது. வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவிலிருந்து துவங்கிய பேரணி, கலெக்டர் அலுவலகம் வரை சென்றது. 'திருச்சி கட்டுமான அமைப்புசாரா நலவாரியத்தின் சீர்கேடுகளை சரிசெய்யவும், மணல்விலையேற்றத்தை குறைக்கவும், அமைப்புசாரா வாரியத்தில் உள்ள ஒன்றரை லட்சம் உறுப்பினர்களுக்கு பலன்களை உடனடியாக அளித்திடவும்' கோரி பேரணி நடந்தது. பேரணியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் பேரணி முடிவடைந்ததும், முக்கிய பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டரிடம் சென்று கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர். பேரணியை முன்னிட்டு கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிகாமணி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


