/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/பஞ்., கவுன்சிலர் தேர்தலில் தனித்தனி கலரில் ஓட்டு சீட்டு: கலெக்டர் அறிவிப்புபஞ்., கவுன்சிலர் தேர்தலில் தனித்தனி கலரில் ஓட்டு சீட்டு: கலெக்டர் அறிவிப்பு
பஞ்., கவுன்சிலர் தேர்தலில் தனித்தனி கலரில் ஓட்டு சீட்டு: கலெக்டர் அறிவிப்பு
பஞ்., கவுன்சிலர் தேர்தலில் தனித்தனி கலரில் ஓட்டு சீட்டு: கலெக்டர் அறிவிப்பு
பஞ்., கவுன்சிலர் தேர்தலில் தனித்தனி கலரில் ஓட்டு சீட்டு: கலெக்டர் அறிவிப்பு
ADDED : அக் 06, 2011 03:37 AM
பெரம்பலூர்: 'பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் ஒரே ஓட்டுச்சாவடியில் இரண்டு பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்களுக்கு தேர்தல் நடைபெறும் இடங்களில் தனித்தனி கலரில் ஓட்டுச்சீட்டுகள் வழங்கப்படும்' என, மாவட்ட கலெக்டர் தரேஸ் அகமது தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
பெரம்பலூர் யூனியனுக்குட்பட்ட நகரப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை யூனியனுக்குட்பட்ட நகரப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தது.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் தரேஸ்அஹமது தொடங்கி வைத்து பேசியதாவது:
பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் நகர்புற பகுதிகளான பெரம்பலூர் நகராட்சி, லப்பைக்குடிக்காடு, பூலாம்பாடி, அரும்பாவூர், குரும்பலூர் டவுன் பஞ்சாயத்து ஆகிய பகுதிகளுக்கு மின்னணு இயந்திரம் மூலமும், மீதமுள்ள பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல், ஓட்டு சீட்டினை பயன்படுத்தியும் ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது.
நகரப்பகுதிகளில் சிறிய கிராம பஞ்சாயத்துகளில் பல உறுப்பினர்கள் கொண்ட வார்டுகள் அனைத்தும், ஒரு உறுப்பினர் கொண்ட வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ள வார்டுகளுக்கு தனித்தனி ஓட்டுச்சாவடி என்ற அளவில் 192 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
குறைவான வாக்காளர்களையும, அருகருகேயும் அமைந்துள்ள சிறிய பஞ்சாயத்து வார்டுகளுக்கு, இரு சிறிய பஞ்சாயத்து வார்டுகளுக்கு ஒரு ஓட்டுச்சாவடி என்ற அளவில் 420 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகரப்பகுதிகளில் ஒவ்வொரு வாக்காளரும் கிராம பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், யூனியன் கவுன்சிலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய நான்கு பதவிகளுக்கு, நான்கு ஓட்டுச்சீட்டுகளில் ஓட்டளிக்க வேண்டும்.
மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு மஞ்சள் நிற ஓட்டுச்சீட்டும், யூனியன் கவுன்சிலர் பதவிக்கு பச்சை நிற ஓட்டுச்சீட்டும், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிறத்திலும் ஓட்டுச்சீட்டுகள் வழங்கப்படும்.
பதிவு செய்யப்பட்ட அனைத்து ஓட்டுச்சீட்டுகளையும் தனித்தனியாக மடித்து ஒரே ஓட்டுப்பெட்டியில் போட வேண்டும். கிராம பஞ்சாயத்து வார்டுகளுக்கான தேர்தல், ஒரே ஓட்டுச்சாவடியில் நடைபெறுகிற இடங்களில் மட்டும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தல் மட்டும் தனித்தனியாக நடத்தப்படும். அதனை பிரித்தறியும் வகையில் ஒரு கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான ஓட்டுச்சீட்டு வெள்ளை நிறத்திலும், மற்றொரு பஞ்சாயத்து வார்டுக்கான வாக்குச்சீட்டு வெளிர் நீலநிறத்திலும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.


