/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை ஆனைமலையில் 12 அடி நீள மலைப்பாம்புகோவை ஆனைமலையில் 12 அடி நீள மலைப்பாம்பு
கோவை ஆனைமலையில் 12 அடி நீள மலைப்பாம்பு
கோவை ஆனைமலையில் 12 அடி நீள மலைப்பாம்பு
கோவை ஆனைமலையில் 12 அடி நீள மலைப்பாம்பு
ADDED : ஜூலை 19, 2011 12:33 AM
ஆனைமலை : ஆனைமலையை அடுத்த ஆழியார் தோட்டத்துக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை, வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
ஆழியார் அருகே, விவசாயி நேரு தோட்டத்தினுள் கடந்த சில நாட்களுக்கு முன் புகுந்த மலைப்பாம்பு, அங்கிருந்த ஆட்டுக்குட்டியை விழுங்கி நகர முடியாமல் கிடந்தது. இதைப் பார்த்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்பு, மலைப்பாம்பை பிடித்தனர். பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் வீரமணி உத்தரவின் பேரில், வனக்காப்பாளர் சிவக்குமார், வனக்காவலர் கதிர்வேல், வேட்டைத்தடுப்பு காவலர்கள் காளிதாஸ், அர்ஜூனன், முத்துக்குமார் ஆகியோர் மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.