/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/போலீஸ்காரர் சட்டை கிழிப்பு வி.சி.,கட்சி நிர்வாகி மீது வழக்குபோலீஸ்காரர் சட்டை கிழிப்பு வி.சி.,கட்சி நிர்வாகி மீது வழக்கு
போலீஸ்காரர் சட்டை கிழிப்பு வி.சி.,கட்சி நிர்வாகி மீது வழக்கு
போலீஸ்காரர் சட்டை கிழிப்பு வி.சி.,கட்சி நிர்வாகி மீது வழக்கு
போலீஸ்காரர் சட்டை கிழிப்பு வி.சி.,கட்சி நிர்வாகி மீது வழக்கு
ADDED : அக் 07, 2011 01:28 AM
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் அதிரடி படை போலீசாரின் சட்டையை
கிழித்து காயம் ஏற்படுத்திய வி.சி.,மாவட்ட துணை செயலாளர் மீது போலீசார்
வழக்குப் பதிவு செய்தனர்.
உளுந்தூர்பேட்டை அதிரடி படை போலீசார் நேற்று
முன்தினம் மாலை 5.30 மணிக்கு பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியில்
ஈடுபட்டனர். அப்போது விருத்தாசலம் சாலையில் உள்ள அன்பு கேன்டீன் எதிரே
ஆம்னி வேன் நின்றதால் போக்குவரத்து பாதித்தது. இதனால் அதிரடி படை சிறப்பு
சப் இன்ஸ்பெக்டர் ருத்ரமூர்த்தி, போலீசார் சிவமுருகன், வெங்கடசாமி சம்பவ
இடத்திற்கு சென்று ஆம்னி வேனை அங்கிருந்து எடுக்க கூறினர். ஆத்திரமடைந்த
உளுந்தூர்பேட்டை அடுத்த உளுந்தாண்டவர் கோயில் பகுதியைச் சேர்ந்த வி.சி.,
இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணை செயலாளர் சேரன் 35,
வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீஸ்காரர் வெங்கடசாமி சட்டையை கிழித்து
தாக்கினார். இதனை தடுக்க சென்ற சிவமுருகனையும் தாக்கினார். சிவமுருகன்
கொடுத்த புகாரின் பேரில் சேரன் மீது உளுந்தூர் பேட்டை போலீசார் வழக்கு
பதிந்தனர். இதனிடையே ரமேஷ், தன்னை போலீசார் தாக்கியதாக உளுந்தூர்பேட்டை
அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்து, உளுந்தூர்பேட்டை போலீசில்
புகார் கொடுத்தார்.


