/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/வண்டலூர் பூங்காவில் "நைட் சபாரி' பணிகள் நிறுத்தம்வண்டலூர் பூங்காவில் "நைட் சபாரி' பணிகள் நிறுத்தம்
வண்டலூர் பூங்காவில் "நைட் சபாரி' பணிகள் நிறுத்தம்
வண்டலூர் பூங்காவில் "நைட் சபாரி' பணிகள் நிறுத்தம்
வண்டலூர் பூங்காவில் "நைட் சபாரி' பணிகள் நிறுத்தம்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடந்து வந்த, 'நைட் சபாரி' பணிகள், நிதி கிடைக்காததால், நிறுத்தப்பட்டுள்ளன.
'நைட் சபாரி' திட்டத்தில், இரவில் திறந்த வெளியில் சுற்றித் திரியும் விலங்குகளை, பார்வையாளர்கள், 'பேட்டரி பஸ்'சில் சென்று நவீன மின் விளக்குகள் மூலம் கண்டு ரசிக்கலாம். மாலை 6 மணி முதல், இரவு 12 மணி வரை, நைட் சபாரியை சுற்றிப் பார்க்கலாம். மேலும், பார்வையாளர்களின் வசதிக்காக ஓட்டல் உள்ளிட்ட வசதிகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக, 7.8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டரை கி.மீ., தூரத்திற்கு கான்கிரீட் சாலை, சுற்றுச்சுவர், புலி, யானை, இந்திய காட்டுமாடு, புள்ளி மான், கரடி ஆகிய விலங்குகளுக்கான கூண்டுகள் கட்டப்பட்டன. சுற்றி ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளும் நடப்பட்டன.
அடுத்த கட்ட பணிகளை தொடர நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், பணிகள் தடைப்பட்டு வந்தன. இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததை அடுத்து, நைட் சபாரி திட்டப் பணிகளை தொடர, 82 கோடி ரூபாய்க்கு திட்டம் தீட்டப்பட்டு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், இதை மாநில அரசு ஏற்கவில்லை. இதனால், 'நைட் சபாரி' பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காவாக, வண்டலூர் பூங்கா திகழ்கிறது. 603 எக்டேர் பரப்பளவு கொண்ட, இப்பூங்காவில், 1, 500க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. வார நாட்களில் தினசரி அதிகபட்சமாக, 10 ஆயிரம் பேரும், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், 20 ஆயிரம் பேரும் வருகின்றனர்.