/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ரெப்கோ பாங்கில் டெபாசிட்டுக்கு கூடுதல் வட்டிரெப்கோ பாங்கில் டெபாசிட்டுக்கு கூடுதல் வட்டி
ரெப்கோ பாங்கில் டெபாசிட்டுக்கு கூடுதல் வட்டி
ரெப்கோ பாங்கில் டெபாசிட்டுக்கு கூடுதல் வட்டி
ரெப்கோ பாங்கில் டெபாசிட்டுக்கு கூடுதல் வட்டி
ADDED : செப் 25, 2011 12:48 AM
தூத்துக்குடி :ரெப்கோ பாங்கில் டெபாசிட்டுக்கு கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது.இதுகுறித்து பாங்க் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது.
ரெப்கோ பாங்கில் ரெப்கோ 22 என்ற புதிய திட்டமான 22 மாத காலத்திற்கு மூத்த குடிமக்களுக்கு 11 சதவீத வட்டியும் மற்றவர்களுக்க 10.60 சதவீத வட்டியும் அறிமுகப்படுத்தியுள்ளது. குறுகிய கால டெபாசிட்டான 90 நாட்கள் முதல் 180 நாட்களுக்கு 9 சதவீத வட்டியும் வழங்கிவருகிறது. டெபாசிட்டுகளுக்கு மூத்த குடிமக்களுக்கு 1 வருடம் முதல் 2வருடம் வரை 10.50 சதவீத வட்டியும், மற்றவர்களுக்கு 10.10 சதவீத வட்டியும் வழங்குகிறது. மேலும் குறுகிய கால திட்டமான ரெப்கோ 333 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி அதற்கு 10 சதவீத வட்டியை வழங்குகிறது.பாங்கில் நகைக்கடனுக்கு மிக அதிகபட்சமாக கிராம் ஒன்றுக்கு ரூ.ஆயிரத்து 800 வரை மிககுறைந்த வட்டியில் உச்சவரமின்றி தினந்தோறும் நகைக்கடன் வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.