ADDED : ஜூலை 28, 2011 09:27 PM
வால்பாறை : வால்பாறை அருகே மீண்டும் காட்டுயானைகள் தொழிலாளர்கள் வீடுகளை
இடித்து, வாழைகளை சாப்பிட்டன.
வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா
வனப்பகுதியில் கடந்த நான்கு நாட்களாக ஏழு காட்டுயானைகள் குட்டியானையுடன்
முகாமிட்டுள்ளது. இந்நிலையில் நடுமலை எஸ்டேட் வடக்குப்பிரிவில் நேற்று
நள்ளிரவு 12.00 மணிக்கு சென்ற காட்டுயானைகள் கூட்டம் காலியாக உள்ள 3
தொழிலாளர்களின் வீடுகளை இடித்தும், தோட்டத்தில் பயிரிடப்பட்ட வாழைகளையும்
ருசித்து சாப்பிட்டது. வனத்துறையினருடன், தொழிலாளர்கள் இணைந்து அதிகாலை
3.00 மணிக்கு வனப்பகுதிக்குள் விரட்டினர்.


