ADDED : ஆக 14, 2011 10:22 PM
வடமதுரை : வேடசந்தூர் தொகுதி அ.தி.மு.க., சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் அய்யலூரில் நடந்தது.
இணை செயலாளர் ராஜமோகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் அழகர்சாமி, சுப்பிரமணியன், பாண்டியன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மணி வரவேற்றார். தம்பித்துரை எம்.பி., பழனிச்சாமி எம்.எல்.ஏ., மாநில பாசறை இணை செயலாளர் முத்துச்சாமி, விவசாய அணி துணை செயலாளர் சின்னாத்தேவர், சிறுபான்மை அணி துணை செயலாளர் கமால்மைதீன், இளைஞரணி முன்னாள் துணை செயலாளர் நந்தகோபால், எரியோடு நகர செயலாளர் அறிவாளி, பேரவை செயலாளர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.