மாநகராட்சி வாக்காளர் பட்டியல் வெளியீடு
மாநகராட்சி வாக்காளர் பட்டியல் வெளியீடு
மாநகராட்சி வாக்காளர் பட்டியல் வெளியீடு
ADDED : செப் 21, 2011 01:11 AM
மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலை கமிஷனர் நடராஜன் நேற்று வெளியிட்டார். 1வது மண்டலம் (1-23 வார்டுகள்), ஆண்கள் 1,37,733, பெண்கள் 1,36,504. 2வது மண்டலம் (24 - 49), ஆண்கள் 1,25,960, பெண்கள் 1,27,164. 3வது மண்டலம் (50 - 74), ஆண்கள் 1,09,391, பெண்கள் 1,06,836. 4வது மண்டலம் (75 - 100), ஆண்கள் 1,24,278, பெண்கள் 1,22,932. மொத்த வாக்காளர்கள் 9,90,798.
விரிவாக்கம் செய்யப்பட்ட மாநராட்சி வார்டுகளின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9,91,504. மண்டலங்கள் வாரியாக பிரிக்கப்பட்ட பின், வாக்காளர்களின் எண்ணிக்கையில் 706 பேர் பெயர் குறைந்துள்ளது. இது எந்த மண்டலத்தில் குறைவுபட்டுள்ளது, என அதிகாரிகள் தொடர்ந்து சரிபார்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கமிஷனர் நடராஜன் கூறுகையில், ''வாக்காளர் பெயர் விடுபட்டுள்ளது சரிசெய்யப்பட்டுவிடும். இதற்காக யாரும் மீண்டும் மனுக்கள் கொடுக்க தேவையில்லை. எந்த பகுதியில் உள்ள பெயர்கள் விடுபட்டுள்ளது, என கண்டறியும் பணி மும்முரமாக நடக்கிறது. மதுரை மாநகராட்சியில் மேயர், கவுன்சிலர் என தனித்தனியாக இரண்டு மின்னணு ஓட்டுப்பதிவு மெஷின் மூலம் வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம், என்றார்.