Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டி யூனியனில் 22 பேர் வேட்பு மனு தாக்கல்

கோவில்பட்டி யூனியனில் 22 பேர் வேட்பு மனு தாக்கல்

கோவில்பட்டி யூனியனில் 22 பேர் வேட்பு மனு தாக்கல்

கோவில்பட்டி யூனியனில் 22 பேர் வேட்பு மனு தாக்கல்

ADDED : செப் 24, 2011 01:50 AM


Google News

கோவில்பட்டி : கோவில்பட்டி யூனியனில் பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்தலில் போட்டியிட 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கோவில்பட்டி யூனியன் பஞ்.,தலைவர் வார்டு கவுன்சில் யூனியன் வார்டு கவுன்சிலர் பொறுப்பிற்கு தேர்தலில் போட்டியிட நேற்று முன்தினம் முதல் வேட்புமனு தாக்கல் துவங்கியது. அப்போது முதல் நாள் இறுதியில் பஞ்.,வார்டு கவுன்சிலர் பொறுப்பிற்கு ஒருவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் வேட்புமனு தாக்கலின் இரண்டாம் நாளான நேற்று கோவில்பட்டி யூனியனில் பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்தலில் போட்டியிட 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.



இதில் 11வது வார்டு யூனியன் கவுன்சிலருக்கு சமுத்திரகனி மனைவி சுந்தரம்மாள், இனாம்மணியாச்சி பஞ்.,தலைவருக்கு காளிராஜ், சின்னமலைக்குன்றுபஞ்.,தலைவருக்கு வேல்முருகன் மற்றும் பஞ்., வார்டு உறுப்பினருக்கு 19 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கோவில்பட்டி நகராட்சி சேர்மன், வார்டு கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் மற்றும் கழுகுமலை டவுன் பஞ்.,தலைவர், வார்டு கவுன்சிலர் பொறுப்பிற்கு போட்டியிட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us