ADDED : செப் 23, 2011 12:56 AM
பரமக்குடி : பரமக்குடியில், ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., தொண்டர்கள் கூட்டம் நடந்தது.
மாவட்ட அவைத்தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாநில ஜெ., பேரவை செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான நயினார் நாகேந்திரன், விவசாய பிரிவு செயலாளர் சிவசாமி சிறப்புரையாற்றினர். கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டு அ.தி.மு.க., வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான முருகன், சுந்தரராஜ் எம்.எல்.ஏ., பேசினர். மாவட்ட அவைத்தலைவர் எஸ்.கே.ஜி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., பாலுச்சாமி, நகர செயலாளர் ஜமால், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர்கள் கார்மேகம்(நயினார்கோவில்), நாகநாதன்(போகலூர்), முத்தையா(பரமக்குடி), மீனாட்சி சுந்தரம்(கமுதி) மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.