ADDED : செப் 23, 2011 12:56 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் வேடபட்டி பள்ளிவாசல் பணியாளரை அரிவாளால் வெட்டியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் வேடபட்டியில் உள்ள பள்ளிவாசலில் மோதினாராக பணிபுரிந்து வருபவர் சாதிக் அலி, 25. இவர், பள்ளிவாசல் பணியில் இருந்தபோது, அடையாளம் தெரியாத சிலர், அரிவாளால் வெட்டினர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வேடபட்டி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.