/உள்ளூர் செய்திகள்/மதுரை/ரூ.1.75 கோடி மதிப்புள்ள இடம் ஆக்கிரமிப்புதி.மு.க., கவுன்சிலர் உட்பட 2 பேர் கைதுரூ.1.75 கோடி மதிப்புள்ள இடம் ஆக்கிரமிப்புதி.மு.க., கவுன்சிலர் உட்பட 2 பேர் கைது
ரூ.1.75 கோடி மதிப்புள்ள இடம் ஆக்கிரமிப்புதி.மு.க., கவுன்சிலர் உட்பட 2 பேர் கைது
ரூ.1.75 கோடி மதிப்புள்ள இடம் ஆக்கிரமிப்புதி.மு.க., கவுன்சிலர் உட்பட 2 பேர் கைது
ரூ.1.75 கோடி மதிப்புள்ள இடம் ஆக்கிரமிப்புதி.மு.க., கவுன்சிலர் உட்பட 2 பேர் கைது
ADDED : ஆக 19, 2011 04:56 AM
மதுரை:மதுரையில் ரூ.1.75 கோடி மதிப்புள்ள இடத்தை போலியாக பத்திரம் பதிவு
செய்து ஆக்கிரமித்த வழக்கில் மாநகராட்சி 52வது வார்டு தி.மு.க. கவுன்சிலர்
மலைச்சாமி, 40 உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.மதுரை
சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது குடும்பத்திற்கு சொந்தமான
39 சென்ட் இடம் ஜெய்
ஹிந்துபுரம் பாரதியார் ரோட்டில் உள்ளது. இதன் ஒரு பகுதியை கிரையம் பெற்று,
அதே பகுதியைச் சேர்ந்த சுகுமாறன், ராஜேஸ்வரி, மரியதாஸ் ஆகியோர்
அனுபவிக்கின்றனர்.இந்நிலையில், ரூ.1.75 கோடி மதிப்புள்ள 39 சென்ட் இடத்தை
மதுரை மாநகராட்சி 52வது வார்டு(தெப்பக்குளம் பகவலன் நகர்) தி.மு.க.,
கவுன்சிலர் மலைச்சாமி, 40 அவனியாபுரம் சாமிநாதன், 43 உட்பட 12 பேருடன்
சேர்ந்து, போலி பவர் பத்திரம் தயார் செய்து, தனது மனைவி மரகதம்மாள் பெயரில்
கடந்தாண்டு அக்.28ல் பத்திரம் பதிவு செய்தார். இதைதொடர்ந்து, மலைச்சாமி
மற்றும் சாமிநாதன் ஆகியோர் அடியாட்களுடன் அந்த இடத்தை ஆக்கிரமித்தனர்.
நேற்று இந்த இடத்தை பார்வையிட வந்த அவர்களிடம், முருகன் மற்றும்
பாதிக்கப்பட்டவர்கள் கேட்க, மிரட்டப்பட்டனர். இதுகுறித்து மத்திய
குற்றப்பிரிவு போலீசில் முருகன் புகார் செய்ததன் பேரில், மலைச்சாமி,
சாமிநாதனை இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் கைது செய்தார்.