/உள்ளூர் செய்திகள்/சென்னை/காசநோய் மருத்துவமனையில் பாதுகாப்பில்லாத கைதிகள் வார்டுகாசநோய் மருத்துவமனையில் பாதுகாப்பில்லாத கைதிகள் வார்டு
காசநோய் மருத்துவமனையில் பாதுகாப்பில்லாத கைதிகள் வார்டு
காசநோய் மருத்துவமனையில் பாதுகாப்பில்லாத கைதிகள் வார்டு
காசநோய் மருத்துவமனையில் பாதுகாப்பில்லாத கைதிகள் வார்டு
ADDED : செப் 17, 2011 10:33 PM
தாம்பரம் : தாம்பரம் சானடோரியம் காசநோய் மருத்துவமனையில் உள்ள சிறை கைதிகளுக்கான வார்டு, பாதுகாப்பில்லாத நிலையில் உள்ளது.
இதனால், அடிக்கடி கைதிகள் தப்பித்து செல்லும் சம்பவங்கள் நடக்கின்றன.
தாம்பரம், சானடோரியத்தில் காசநோய் மருத்துவமனை இயங்கி வருகிறது. சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும், தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.நூற்றுக்கணக்கானோர், உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு, சிறை கைதிகளுக்கு என்று, தனியாக ஒரு வார்டு உள்ளது. தமிழகம் முழுவதும் சிறைகளில் இருக்கும் கைதிகளுக்கு காசநோய், எய்ட்ஸ் போன்ற நோய் ஏற்பட்டால், அவர்கள் சிகிச்சைக்காக இங்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.கைதிகள் வார்டில் மொத்தம் எட்டு பெட்டுகள் உள்ளன. இந்த வார்டில் 24 மணி நேரமும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். சென்னையை கலக்கிய, 'சைக்கோ' சுப்பிரமணி, ராஜ்குமார் உள்ளிட்ட ஐந்து கைதிகள் தற்போது இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த வார்டில், பாதுகாப்பு வசதிகள் போதுமான அளவில் இல்லை. வார்டை ஒட்டி புதர் உள்ளதால், அடிக்கடி பாம்பு, தேள், விஷ வண்டுகள் புகுந்து விடுகின்றன. இது கைதிகளுக்கு மட்டுமின்றி, பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு என்று தனியாக இடம் இல்லை. இரவில் கைதிகளோடு ஒன்றாக இருக்க வேண்டியுள்ளது. கட்டடம் பழமையானது என்பதால், ஜன்னல், கதவு உறுதியுடன் இல்லை.இதனால், அவ்வப்போது கைதிகள் தப்பித்து செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கைதிகளை, மருத்துவ பரிசோதனைக்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாரே அழைத்து செல்ல வேண்டியுள்ளது. 6 கைதிகள் 'எஸ்கேப்'கைதிகள் வார்டில் பாதுகாப்பு வசதி இல்லாததால், அடிக்கடி கைதிகள் தப்பித்து சென்று விடுகின்றனர். பாத்ரூம் ஜன்னலை உடைத்தும், போலீசாரை ஏமாற்றி தப்பித்து செல்கின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஆறு கைதிகள் ஜன்னலை உடைத்து, தப்பித்துள்ளனர்.