எஸ்.டி., சான்று பெற முறைகேடாக முயற்சி
எஸ்.டி., சான்று பெற முறைகேடாக முயற்சி
எஸ்.டி., சான்று பெற முறைகேடாக முயற்சி
ADDED : ஆக 15, 2011 02:13 AM
கோபிசெட்டிபாளையம்: ''மலைப்பகுதியில் வசிக்காதவர்களும் எஸ்.டி., சான்று பெற முயற்சி செய்கின்றனர்,'' என, கோபி ஆர்.டி.ஓ., பழனிசாமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பட்டா மாறுதல் விதிகளை தமிழக அரசு தளர்த்தி உள்ளது. பட்டா மாறுதல் செய்வோர் தாலுகா அலுவலகங்களில் கொடுப்பதை தவிர்த்து, அந்தந்த வி.ஏ.ஓ.,விடம் விண்ணப்பங்கள் அளிக்கலாம். விண்ணப்பம் கொடுத்த 15 அல்லது 30 நாட்களுக்குள் பரிசீலனை செய்து, பட்டா வழங்கப்படும். மணல் கடத்தல் குறித்த தகவலை, அதிகாரிகளுக்கு, பொது மக்கள் தெரிவிக்கலாம். புகார் தருவோர் குறித்த ரகசியம் காக்கப்படும். கோபி தாலுகாவில் மலைப்பகுதியில் இருளர், சோழகர், ஊராளி போன்ற இனத்தவர்கள் வசிக்கின்றனர். மலைப்பகுதியில் வசிக்காதவர்களும் எஸ்.டி., சான்று பெற முயற்சி செய்கின்றனர். ஆகையால், மலைப்பகுதியில் வசிப்பவர்கள் குறித்த முழு விசாரணை செய்த பிறகே சான்று வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.