ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில்நடைமேடை அமைப்பதற்கு எதிர்ப்பு
ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில்நடைமேடை அமைப்பதற்கு எதிர்ப்பு
ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில்நடைமேடை அமைப்பதற்கு எதிர்ப்பு

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் அலைகளால் சேதமடைந்த நடைமேடையை மீண்டும் அமைத்து வருவதற்கு, இந்து இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் நடைமேடையை மீண்டும் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தூர்ந்து போன நடைமேடைப் பகுதியை அப்படியே விட்டுவிட்டால் நாளடைவில் கடற்கரையில் மணல் சேரும். பக்தர்கள் மணலில் லிங்கம் பிடித்து பூஜை செய்வதற்கு வசதியாக இருக்கும். இதனால் நடைமேடையை மீண்டும் சீரமைக்கக்கூடாது என, பல அமைப்புகள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தன.ராமேஸ்வரம் பாரம்பரிய அக்னிதீர்த்த கடற்கரை மீட்பு மற்றும் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பளர் சிவராஜன் கூறியதாவது: ஆன்மிகத்திற்கு முரணாக தனிநபரால் அனுமதி இல்லாமல் கட்டிய படித்துறை அகற்றப்படவில்லை. மக்கள் வரிப்பணத்தை விரையம் செய்யும் வகையில் சேதமடைந்த நடைமேடையை கட்டும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் உடனடியாக கைவிடவேண்டும்.
இல்லையெனில் வழக்கு தொடரப்படும், என்றார்.இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கூறியதாவது: கடற்கரையோரத்தில் இதுபோன்ற கட்டுமானங்கள் அமைப்பது கடல் சூழலுக்கு விரோதமானது. இந்துக்கள் மணலில் அமர்ந்து முறையாக செய்ய வேண்டிய காரியங்களும் செய்ய இயலாமல் போகிறது. ஆகம விதிகளுக்கு முரணாக நடைமேடை மீண்டும் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.ராமேஸ்வரம் நகராட்சி இன்ஜினியர் ரத்தினவேலு கூறியதாவது: சேதமடைந்த நடைமேடையால் நடமாட முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் நடைமேடையை சீரமைக்கும் பணி தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாக கட்டுமான பணிகளை செய்யவில்லை, என்றார்.