புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பெயர் ஸ்கைஃபால்!
புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பெயர் ஸ்கைஃபால்!
புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பெயர் ஸ்கைஃபால்!
ADDED : அக் 07, 2011 10:03 PM

23வது ஜேம்ஸ் பாண்ட் படம் தயாராக இருக்கிறது. இப்படத்திற்காக ஸ்கைஃபால் என்ற பெயரை படக்குழு ரிஜிஸ்டர் செய்துள்ளதாம். இப்படத்திற்கு பைனான்ஸ் செய்யும் எம்.ஜி.எம்., பிலிம்ஸ் நிறுவனமும் , சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் ஸ்கைஃபால் பெயரினை ரிஜிஸ்டர் செய்துள்ளது. இருந்தாலும் படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இத்திரைப்படத்தில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் கிரெய்க் நடிக்கிறார். இப்படம் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 26ம் தேதியன்று லண்டன் மற்றும் அயர்லாந்திலும் ; நவம்பர் 9ம் தேதியன்று அமெரிக்காவிலும் ரிலீசாகும் என கூறப்படுகிறது.


