ADDED : ஜூலை 23, 2011 11:38 PM
நடுவீரப்பட்டு : வடலூர் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் சேவை திட்டங்கள் துவக்க விழா நடந்தது.
அரிமா சங்க இயக்குனர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். சங்கத் தலைவராக தெய்வசிகாமணி, செயலராக பழனியப்பன், பொருளாளராக மணிகண்டன் பதவியேற்றனர். மூக்கையா கணேஷ் சேவை திட்டத்தைத் துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் நடந்து முடிந்த 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் அதிக தேர்ச்சி சதவீதம் கொடுத்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. வடலூர் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு வேட்டி சேலை வழங்கப்பட்டது. விழாவில் சித்தார்த்தன், முத்துமாணிக்கம், சண்முகம், பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


