/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மக்களுக்காக அயராது உழைக்க ஜெ.,உத்தரவு : அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேட்டிமக்களுக்காக அயராது உழைக்க ஜெ.,உத்தரவு : அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேட்டி
மக்களுக்காக அயராது உழைக்க ஜெ.,உத்தரவு : அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேட்டி
மக்களுக்காக அயராது உழைக்க ஜெ.,உத்தரவு : அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேட்டி
மக்களுக்காக அயராது உழைக்க ஜெ.,உத்தரவு : அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேட்டி
கடையநல்லூர் : அதிமுக ஆட்சிக்கு வருமென எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கு அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் அயராது பாடுபட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்று நேற்று காலை எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு வருகை தந்த அமைச்சர் செந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:- ''முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி கடையநல்லூர் தொகுதியில் அனைத்து பணிகளும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
அதனை ஏற்று அனைத்து பணிகளும் விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். பணிகளில் குறைபாடு இருக்கிறது என்பது தெரிந்தால் அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய ஏற்பாடு செய்யப்படும்.கடையநல்லூர் தொகுதியில் தேர்தல் நேரத்தில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் விரைவாக முடித்திட ஏற்பாடு செய்யப்படும். வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாகவும், நிச்சயமாகவும் முடிக்கப்படும். கடையநல்லூர் பகுதியில் நலிவடைந்து காணப்படுவதாக கூறப்படும் கைத்தறி தொழில் எழுச்சிபெற சம்பந்தப்பட்ட துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.பேட்டியின் போது மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், சாம்பவர்வடகரை மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., நயினாமுகம்மது, ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, நகர செயலாளர் கிட்டுராஜா, செங்கோட்டை குருசாமி உடனிருந்தனர்.