/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/உற்பத்தி அதிகரிப்பால் கத்தரிக்காய் விலை சரிவுஉற்பத்தி அதிகரிப்பால் கத்தரிக்காய் விலை சரிவு
உற்பத்தி அதிகரிப்பால் கத்தரிக்காய் விலை சரிவு
உற்பத்தி அதிகரிப்பால் கத்தரிக்காய் விலை சரிவு
உற்பத்தி அதிகரிப்பால் கத்தரிக்காய் விலை சரிவு
ADDED : அக் 07, 2011 01:26 AM
நாமக்கல்: திருச்செங்கோடு சுற்றுவட்டார கிராமங்களில், கத்திரி சாகுபடி
அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. உற்பத்தி அதிகரிப்பு காரணமாக கத்தரிக்காய்
விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால், கத்தரி சாகுபடி செய்துள்ள
விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.திருச்செங்கோடு, எலச்சிபாளையம் யூனியனுக்கு
உட்பட்ட பகுதியில், கணிசமான அளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, காய்கறி, கீரை வகை, காட்டாமணக்கு உள்ளிட்ட குறுகிய கால
பயிர்கள், அதிகளவில் நடவு செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு விண்ணை முட்டும்
அளவுக்கு கத்தரிக்காய் விலை ஏற்றம் கண்டது.அதையடுத்து, மேற்குறிப்பிட்ட
பகுதியில், பெரும்பாலான விவசாயிகள் கத்தரி பயிர் நடவுக்கு மாறினர். மூன்று
மாதத்தில் பலன் தரும் கத்தரி செடியில், தொடர்ந்து ஐந்தாண்டு வரை
காய்ப்பிடிப்பு இருக்கும். இங்கு உற்பத்தி செய்யப்படும் கத்தரி, நாமக்கல்
மாவட்டம் மட்டுமின்றி, திருச்சி போன்ற வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு
அனுப்பப்படுகிறது.இந்நிலையில், தற்போது கத்தரி விளைச்சல்
அதிகரித்துள்ளதால், விலை சரிவடைந்துள்ளது.
அதனால், கத்தரி பயிரிட்டுள்ள
விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.இதுகுறித்து மானத்தி கிராமத்தை சேர்ந்த
கத்தரி விவசாயி சந்திரன் கூறியதாவது:ஒரு ஏக்கர் கத்தரி நடவு செய்து பலன்
கிடைக்கும் வரை, 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு பிடிக்கும். இப்பகுதியில்,
கண்ணாடி கத்தரி அதிகளவில் நடவு செய்யப்படுகிறது. அவை, நாள்தோறும் அறுவடை
செய்து, திருச்சிக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கத்தரிக்கு நல்ல விலை
கிடைத்தால் மட்டுமே போட்ட முதலீடு எடுக்க முடியும்.தற்போது, ஒரு கிலோ
கத்தரி, 12 ரூபாய் வரை விற்பனையாகிறது. இது, விவசாயிகளுக்கு கட்டுப்படியான
விலை இல்லை. புரட்டாசி மாதத்தில், பருவ மழைப்பொழிவு இருக்கும். அதனால்,
திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பிற பயிர்களை அகற்றி விட்டு நெல் நடவு
செய்யப்படும்.
அதனால், கத்திரி உள்ளிட்ட காய்கறிகளின் உற்பத்தி குறைந்து, விலை கணிசமாக
உயரும். ஆனால், இந்தாண்டு எதிர்பார்த்த அளவுக்கு மழைப்பொழிவு இல்லாததால்,
நெல் நடவு குறைந்து, மற்றவை பயிரிடப்பட்டு வருகின்றன. அதனால், மற்ற
காய்கறிகளின் விலை இறங்குமுகமாக உள்ளது.குறிப்பாக, கத்தரிக்காயின் விலையில்
சரிவு ஏற்பட்டுள்ளது. இது கட்டுப்படியான விலை இல்லை. மழைப்பொழிவு இல்லாததே
இப்பிரச்னைக்கான முக்கிய காரணம்.இவ்வாறு கூறினார்.


