/உள்ளூர் செய்திகள்/கடலூர்/குத்தகை என்ற பெயரில் வசூல் சில்வர் பீச் வியாபாரிகள் புகார்குத்தகை என்ற பெயரில் வசூல் சில்வர் பீச் வியாபாரிகள் புகார்
குத்தகை என்ற பெயரில் வசூல் சில்வர் பீச் வியாபாரிகள் புகார்
குத்தகை என்ற பெயரில் வசூல் சில்வர் பீச் வியாபாரிகள் புகார்
குத்தகை என்ற பெயரில் வசூல் சில்வர் பீச் வியாபாரிகள் புகார்
ADDED : செப் 17, 2011 01:00 AM
கடலூர் : கடலூர் சில்வர் பீச்சில் அடாவடி வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வியாபாரிகள் நகராட்சி கமிஷனரிடம் புகார் தெரிவித்தனர்.கடலூர், தேவனாம்பட்டினம் சில்வர் பீச் வளாகத்தில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் கடை, ஐஸ் கிரீம் கடை என 68 கடைகள் உள்ளது.
நகராட்சி நிர்வாகத்தின் அனுமதியுடன் கடை நடத்தி வரும் வியாபாரிகள், கடைகளுக்கு ஏற்ப 150 ரூபாய், 250, 500 ரூபாய் என ஆண்டு தோறும் நகராட்சிக்கு செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் கடைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக கூறி சிலர் அடாவடியாக 10 ரூபாய் வசூல் செய்கின்றனர். மறுக்கும் வியாபாரிகளை தாக்குகின்றனர். எனவே, அடாவடி வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்திற்குச் ö÷ன்று கமிஷனர் இளங்கோவனை சந்தித்து புகார் தெரிவித்தனர்.