/உள்ளூர் செய்திகள்/கடலூர்/இ.எஸ்.ஐ., திட்டத்தை தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: கலெக்டர்இ.எஸ்.ஐ., திட்டத்தை தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: கலெக்டர்
இ.எஸ்.ஐ., திட்டத்தை தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: கலெக்டர்
இ.எஸ்.ஐ., திட்டத்தை தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: கலெக்டர்
இ.எஸ்.ஐ., திட்டத்தை தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: கலெக்டர்
கடலூர் : தொழிலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் இ.எஸ்.ஐ., திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் அமுதவல்லி கேட்டுக்கொண்டார்.
விழிப்புணர்வு முகாமை கலெக்டர் அமுதவல்லி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது: இ.எஸ்.ஐ., திட்டம் பற்றி தொழிலாளர்கள், தொழில் முனைவோர் அறிந்து கொள்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொழிற்சாலையில் ஏற்படும் விபத்தோ, உடல்நலக்குறைவோ ஏற்பட்டால் இந்த திட்டம் மூலம் பயன் பெறலாம். இத்திட்டத்திற்காக 1.25 சதவீதம் தொழிலாளியும், 4.75 சதவீதம் நிறுவனமும் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் தொழிலாளர்கள், அவர்களின் மனைவிக்கு மகப்பேறு உதவி உட்பட 5 அம்ச உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த இ.எஸ்.ஐ., திட்டத்தை தொழிலாளர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் அமுதவல்லி பேசினார். தொழிலாளர் நடுவர் நீதிமன்ற நீதிபதி நாராணசாமி, மணி, கங்கா பிரசாத், மருத்துவ நலப்பணிகள் இயக்குனர் தர்மலிங்கம் உட்பட பலர் பேசினர்.


