/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஊக்க தொகை வழங்கல்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஊக்க தொகை வழங்கல்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஊக்க தொகை வழங்கல்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஊக்க தொகை வழங்கல்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஊக்க தொகை வழங்கல்
ADDED : செப் 20, 2011 01:32 AM
அரியலூர்: அரியலூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஊக்க தொகை வழங்கும் விழா நடந்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவுபடி, அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு ஊக்க தொகை வழங்கும் திட்ட துவக்க விழா, அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட கலெக்டர் அனு ஜார்ஜ் தலைமையில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., துரை மணிவேல் முன்னிலை வகித்தார். சி.இ.ஓ., சுகுமார் தேவதாஸ் வரவேற்றார். எஸ்.எஸ்.எல்.ஸி., படிக்கும் 171 மாணவர்களுக்கு இரண்டு லட்சத்து 56 ஆயிரத்து 500 ரூபாய் ஊக்க தொகைக்கான பத்திரம், ப்ளஸ் 1 படிக்கும் மாணவ, 310 மாணவிகளுக்கு நான்கு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கான ஊக்க தொகை பத்திரம், ப்ளஸ் 2 படிக்கும் 390 மாணவ, மாணவிகளுக்கு ஏழு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகைக்கான பத்திரம் உள்பட, 871 மாணவ, மாணவிகளுக்கு, 15 லட்சத்து ஆயிரத்து 500 ரூபாய் ஊக்க தொகைக்கான பத்திரங்களை, மாவட்ட கலெக்டர் அனு ஜார்ஜ் வழங்கி பேசினார். விழாவில், டி.ஆர்.ஓ., பூங்கொடி, மாவட்ட கல்வி அலுவலர்கள் அரியலூர் ஜெயலெக்ஷ்மி, உடையார்பாளையம் மகாலிங்கம், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் வீரராகவன், சுப்ரமணியன், தலைமை ஆசிரியர்கள் சின்னதுரை, ராமலிங்கம், மாவட்ட பள்ளி கல்வி ஆய்வாளர் சரவணராஜா, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


