Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/டி.எஸ்.பி.,கள் 8 பேர் இடமாற்றம் "காத்திருக்க' இருவருக்கு உத்தரவு

டி.எஸ்.பி.,கள் 8 பேர் இடமாற்றம் "காத்திருக்க' இருவருக்கு உத்தரவு

டி.எஸ்.பி.,கள் 8 பேர் இடமாற்றம் "காத்திருக்க' இருவருக்கு உத்தரவு

டி.எஸ்.பி.,கள் 8 பேர் இடமாற்றம் "காத்திருக்க' இருவருக்கு உத்தரவு

ADDED : ஜூலை 13, 2011 01:09 AM


Google News

கோவை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய எட்டு டி.எஸ்.பி.,கள் மாற்றப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு ( என்.ஐ.பி.சி.ஐ.டி.,) டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய உமாமகேஸ்வரன் அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு புதிய பணியிடம் ஒதுக்கப்படாமல் மாநில போலீஸ் தலைமையிடத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். சேலம் மாநகர போலீஸ் கிழக்கு சட்டம்- ஒழுங்கு உதவிக்கமிஷனராக பணியாற்றிய சோமசேகர் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு, தஞ்சாவூர் மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டிருந்தார்; இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, கோவை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவில் (புட்செல் சி.ஐ.டி.,) நியமிக்கப்பட்டுள்ளார்.



திருப்பூர் மாவட்டம், காங்கேயம் டி.எஸ்.பி., ஆசைத்தம்பி அங்கிருந்து மாற்றப்பட்டு சமீபத்தில் மதுரை சி.பி.சி.ஐ.டி., யின் ஓ.சி.யூ.,(ஒருங்கிணைந்த குற்றங்களை விசாரிக்கும் யூனிட்) பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார்; இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, கோவை மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய சந்திரமோகன் சமீபத்தில் அங்கிருந்து மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்; தற்போது இவருக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டு, கோவை கிழக்கு உதவிக் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.



சென்னை மத்திய பகுதி ரயில்வே டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய சோமசுந்தரம் மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி.,யின் மாநில தலைமையிடத்தில் நியமிக்கப்பட்டிருந்தார்; இந்த டிரான்ஸ்பர் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, சேலம் மாநகர வடக்குப்பகுதி சட்டம் - ஒழுங்கு உதவிக்கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய ஜானகிராமன் அங்கிருந்து மாற்றப்பட்டு மாநில தலைமையிட காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவிக்கமிஷனராக பணியாற்றிய கந்தசாமி, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர போலீசில் சட்டம் - ஒழுங்கு உதவிக்கமிஷனராக பணியாற்றிய கார்த்திகேயன் நாகபட்டினம் மாவட்டம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். தற்போது இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு திருச்சி ரயில்வே டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தமிழக உள்துறை பிறப்பித்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us