/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சிப்காட்டில் தொழிற்சாலை நிர்வாகிகள் சங்கக் கூட்டம்சிப்காட்டில் தொழிற்சாலை நிர்வாகிகள் சங்கக் கூட்டம்
சிப்காட்டில் தொழிற்சாலை நிர்வாகிகள் சங்கக் கூட்டம்
சிப்காட்டில் தொழிற்சாலை நிர்வாகிகள் சங்கக் கூட்டம்
சிப்காட்டில் தொழிற்சாலை நிர்வாகிகள் சங்கக் கூட்டம்
ADDED : ஜூலை 23, 2011 11:43 PM
முதுநகர் : சிப்காட்டில் தொழிற்சாலை நிர்வாகிகள் சங்கக்கூட்டம் நடந்தது.
கடலூர் சிப்காட் தொழிற்சாலை நிர்வாகிகள் சங்கத்தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏ., சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் சட்டசபை தொகுதி இணைச் செயலர் பாலகிருஷ்ணன், சிப்காட் தொழிற்சங்க நிர்வாகிகள் சங்க உறுப்பினர் ஆனந்த ஜோதி மற்றும் மற்றும் சிப்காட் பகுதியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட தொழிற்சாலை நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், சிப்காட் பகுதியில் தொழில் முனைவோர்கள் புதிய தொழிற்சாலைகளை தொடங்க அரசு ஊக்குவிக்க வேண்டும். கடலூர் - சிதம்பரம் சாலையில் அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய கடலூரில் இருந்து சிதம்பரத்திற்கு பைபாஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்தனர். இதற்கு பதிலளித்த சொரத்தூர் ராஜேந்திரன், 'கடலூரில் இருந்து சிதம்பரத்திற்கு தைக்கால் தோணித்துறை, சித்திரைப்பேட்டை, பரங்கிப்பேட்டை வழியாக மாற்றுத் திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறோம்'' என்றார்.


