/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சிதம்பரத்தில் ஐந்தாம் ஆண்டு திருவாசகப் பெருவிழாசிதம்பரத்தில் ஐந்தாம் ஆண்டு திருவாசகப் பெருவிழா
சிதம்பரத்தில் ஐந்தாம் ஆண்டு திருவாசகப் பெருவிழா
சிதம்பரத்தில் ஐந்தாம் ஆண்டு திருவாசகப் பெருவிழா
சிதம்பரத்தில் ஐந்தாம் ஆண்டு திருவாசகப் பெருவிழா
ADDED : அக் 03, 2011 03:33 AM
சிதம்பரம் : சிதம்பரத்தில் சிவனடியார்களின் திருவாசகம் ஓதுதல், உரைத்தலின் விழா நடந்தது.
சைதை சீரடியார் கூட்டம் சார்பில் சிதம்பரம் வடக்கு வீதியில் ஐந்தாம் ஆண்டு திருவாசகப் பெருவிழா நடந்தது. விழாவில் சிதம்பரம், புதுச்சேரி, நாகை, காரைக்கால், திருச்சி, சென்னை, ராசிபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிவனடியார்கள் பங்கேற்று மாணிக்கவாசகர் பெருமானின் குருவருளாலும் நடராஜபெருமான் எழுதிய திருவாசகம் ஓதுதலும், உரைத்தலும் செய்தனர். விழாவில் ஞானத்திரள் ஆசிரியர் சிவத்திரு சிவக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அருளுரை நிகழ்த்தினார். சிவனடியார்கள் நேற்று முன்தினம் இரவு நடராஜர் கோவிலில் அர்த்தஜாம பூஜையும், நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி தரிசனம் செய்தனர்.


