Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/திருட்டு குடிநீர் இணைப்பில் கவுன்சிலர்களுக்கு தொடர்பு

திருட்டு குடிநீர் இணைப்பில் கவுன்சிலர்களுக்கு தொடர்பு

திருட்டு குடிநீர் இணைப்பில் கவுன்சிலர்களுக்கு தொடர்பு

திருட்டு குடிநீர் இணைப்பில் கவுன்சிலர்களுக்கு தொடர்பு

ADDED : ஆக 18, 2011 12:31 AM


Google News

கடலூர் : பஸ் நிலையத்திற்கு செல்லும் வழியில் ஓட்டல் அருகே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடையை அகற்ற வேண்டும் என நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர் பேசினார்.

கடலூர் நகராட்சி இயல்பு கூட்டம் நேற்று காலை நகர மன்ற கூடத்தில் நடந்தது. சேர்மன் தங்கராசு தலைமை தாங்கினார். 102 தீர்மானங்கள் மீது நடந்த விவாதம் வருமாறு: கூட்டத்தில் சமச்சீர் கல்வி முறை கொண்டு வந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், திட்டத்தை செயல்படுத்த தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. ராஜா (தி.மு.க.,): பாதாள சாக்கடைத் திட்டம் எப்போது முடியும். சேர்மன்: கடந்த 6 மாதங்கள் குடிநீர் வடிகால் வாரியம் பணியை முறையாக செய்யாமல் காலம் கடத்தி வருகிறது. இது குறித்து கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சிவானந்தம் (தி.மு.க.,): மஞ்சக்குப்பத்தில் உள்ள எரிவாயு தகன மேடை எப்போது செயல்படுத்தப்படும். முத்து (சுயே): கடலூர் பஸ் நிலையம் முன்பு கடைகள் இடிக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பூங்கா அமைக்க வேண்டும். பிரகாஷ் (அ.தி.மு.க.,): பஸ் நிலையத்திற்கு செல்லும் வழியில் ஓட்டல் வசந்தபவன் அருகே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடையை அகற்றி விட்டு பின்னர் நடைபாதை கடைகளைப் பற்றி பேசலாம்.

கந்தன் (அ.தி.மு.க.,): கேப்பர் மலையிலிருந்து 4 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் முதுநகர், சோனங்குப்பம், பச்சையாங்குப்பம், சிவானந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு தண்ணீர் செல்கிறது. ஆனால் வரும் வழியில் திருட்டுத் தனமாக இணைப்பு கொடுக்கப்பட்டிருந்த 130 இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



பொறியாளர்: இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் கவுன்சிலர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது. குமார் (அ.தி.மு.க.,): நடப்பது அ.தி.மு.க., ஆட்சி. அதிகாரிகள் யாருக்கும் பயப்பட வேண்டாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள். எந்த குறுக்கீடும் இருக்காது. கோவலன் (தி.மு.க.,): பொறியாளர் இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் பற்றி பேசியது தவறு. இது போன்று ஒரு அதிகாரி பேசக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இவ்வாறு விவாதம் நடந்தது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us