தூம் 3 படத்தின் நாயகியாக கட்ரீனா கைப் தேர்வு!
தூம் 3 படத்தின் நாயகியாக கட்ரீனா கைப் தேர்வு!
தூம் 3 படத்தின் நாயகியாக கட்ரீனா கைப் தேர்வு!
ADDED : செப் 23, 2011 10:44 PM

தூம், தூம் 2 படங்கள் ஹிட்டை தொடர்ந்து தூம் 3 திரைப்படம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை எடுத்து ஓராண்டு காலத்திற்கும் மேலாக, ஒரு புதுமுக நாயகியை தேடி வந்தனர் படத்தை தயாரிக்கும் யாஷ்ராஜ் பில்ம்ஸ் குழுவினர்.
ஆனால் எந்த ஒரு புதுமுக நாயகியும் கதைக்கு அப்படியே செட்டாகவில்லை. விரக்தியில் வெளிநாட்டு நாயகிகள் யாரையாவது புக் செய்யலாம் என்று கூட யோசனை வந்து, அதற்காகவும் அலைந்து திரிந்துள்ளது படக்குழு.
கடைசியில், அங்கு இங்கு என எல்லாப் பக்கமும் சுற்றித் திரிந்து விட்டு ஒருவழியாக, படத்திற்கு புதுமுகம் வேண்டாம் தெரிந்த நாயகியையே பயண்படுத்திக் கொள்வோம் என முடிவு செய்தனர். அப்புறம் என்ன புரோடியூசர், டைரக்டர் என டிஸ்கஷன் செய்துவிட்டு ஏகமனதாக கட்ரீனா கைப் தான் தூம்3 படத்தின் நாயகி என முடிவு செய்தனர்.
அமீர் கான் இப்படத்தில் சற்று வித்தியாச வேடத்தில், ஆன்டி ஹீரோவாக நடிக்கிறார். அமீர்கானும், கட்ரீனாகைப்பும் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர் என்பதால், இதுவே ஒரு பிளஸ்சாக அமையும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
தூம் 3 திரைப்படம் 2012 கிறிஸ்துமஸ் பண்டிடைகையை ஒட்டி வெளியாகும் என அதன் இயக்குநர் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா என்ற விக்டர் தெரிவித்துள்ளார்.


