அமர்சிங் ஜாமின் மனு செப்.15-ம் தேதி தள்ளி வைப்பு
அமர்சிங் ஜாமின் மனு செப்.15-ம் தேதி தள்ளி வைப்பு
அமர்சிங் ஜாமின் மனு செப்.15-ம் தேதி தள்ளி வைப்பு
UPDATED : செப் 13, 2011 02:52 PM
ADDED : செப் 13, 2011 02:17 PM
புதுடில்லி: பாராளுமன்றத்தில் நம்பிக்கைவாக்கெடுப்பிற்கு ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள அமர்சிங்கின் ஜாமின் மனு நீதிபதி சங்கீதாதின்ஹாராஷெகால் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கு செப்.15-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்த அறிக்கையினை செப் 14-ம் தேதி (நாளை) அளிக்க வேண்டும் என எய்மஸ் மருத்துவமனைக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இன்று நடந்த விசாரணையில் , இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு திகார் சிறையில் உள்ள மாஜி பா.ஜ. எம்.பி.க்கள் இருவரின் ஜாமின் மனு 29-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.