Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை புறநகரில் 665 பதட்டமான ஓட்டுச்சாவடிகள் :எஸ்.பி., தகவல்

கோவை புறநகரில் 665 பதட்டமான ஓட்டுச்சாவடிகள் :எஸ்.பி., தகவல்

கோவை புறநகரில் 665 பதட்டமான ஓட்டுச்சாவடிகள் :எஸ்.பி., தகவல்

கோவை புறநகரில் 665 பதட்டமான ஓட்டுச்சாவடிகள் :எஸ்.பி., தகவல்

ADDED : அக் 06, 2011 09:40 PM


Google News
பொள்ளாச்சி : ''கோவை புறநகரில், மொத்தம் 665 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவையாக உள்ளதால், அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது,'' என்று எஸ்.பி., உமா கூறினார்.

பொள்ளாச்சியில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம், போலீஸ் எஸ்.பி., உமா தலைமையில் நடந்தது. வால்பாறை டி.எஸ்.பி., பழனிச்சாமி, பொள்ளாச்சி டி.எஸ்.பி., பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் டி.எஸ்.பி.,க்கள் பேசியதாவது: தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர்கள் தனி நபரை விமர்சித்து பேசக்கூடாது. தினமும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டும். நகரப்பகுதியில் சுவர் விளம்பரம், வால்போஸ்டர்கள் ஒட்டக்கூடாது.பிரசாரத்திற்கு கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது. மக்களுக்கு இடையூறு இல்லாதவாறு ஒலி அளவு வைக்க வேண்டும். பிரசாரத்திற்கு பயன்படுத்தும் அனைத்து வாகனங்களுக்கும் போலீஸ் அனுமதி பெற வேண்டும். கட்சிகளுக்குள் கூட்டணி இல்லாததால் வேட்பாளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிகப்படியான வாகனங்கள் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க கட்சியினர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பிரசாரத்தின் போது தாரை, தப்பட்டை மற்றும் கொட்டு மேளங்களை பயன்படுத்தக்கூடாது. ஓட்டுச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்குள் தேர்தல் விளம்பரம் செய்யக்கூடாது. வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வர வாகனங்கள் ஏற்பாடு செய்யக்கூடாது என்றனர்.எஸ்.பி., உமா பேசுகையில், 'அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள் பொது இடத்தில் உள்ளதால், கொடிகளை கழற்றி விட்டு, கொடிக்கம்பத்தை காகிதம் சுற்றி மறைக்க வேண்டும்.வேட்பாளர்களுடன் ஒப்பிடும் போது போலீஸ் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனால் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுத்து தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும்' என்றனர். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'கோவை புறநகரில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. வரும் 17ம் தேதி நடக்கும் தேர்தலில் 908 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. அதில், 283 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை. வரும் 19ம் தேதி நடக்கும் தேர்தலில் 1,502 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. அதில், 382 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை. இரண்டு கட்ட தேர்தலில் மொத்தம் 665 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவையாக உள்ளதால், அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us