கோயில் சிலைகள் சேதம்: போலீஸ் விசாரணை
கோயில் சிலைகள் சேதம்: போலீஸ் விசாரணை
கோயில் சிலைகள் சேதம்: போலீஸ் விசாரணை
ADDED : செப் 25, 2011 01:28 PM
தேவகோட்டை: தேவகோட்டை அருகே கோயில் சிலைகளை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கும்மங்குடியில் உள்ள கருப்பர் கோயில், இங்குள்ள கருப்பர், காளியம்மன், ராக்காயி உள்ளிட்ட 6 சிலைகள் நேற்று இரவு சில மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது இப்பகுதியில் ஒரு கொலை நடந்துள்ளதால் இதில் தொடர்புடையவர்கள் தான் சிலையை சேதப்படுத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.