மதுரை:மதுரை சென்ஸ் சுற்றுச்சூழல் தொண்டு மையம், நாக்ஸ், செஞ்சிலுவை சங்கம்
சார்பில் திருமலை நாயக்கர் மகாலை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.சென்ஸ்
நிறுவனர் பதி தலைமை வகித்தார்.
நாக்ஸ் பொது மேலாளர் கணேசன் முன்னிலை
வகித்தார். மகாலில் உள்ள புறா எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. மகாலில்
நுழைவுக்கட்டணம்மூலம் கிடைக்கும் வருவாயில், துப்புரவு பணிக்கு குறைந்த
அளவு செலவு செய்தாலே மகால் தூய்மைமிக்க பகுதியாக இருக்கும் அதற்கான
முயற்சியை தொல்லியல் துறை எடுக்க வேண்டும், என இந்த அமைப்புகள் சார்பில்
வலியுறுத்தப்பட்டுள்ளது.