/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பார்சலில் மர்ம பொடி: வாலிபர் எஸ்.பி.,யிடம் புகார்பார்சலில் மர்ம பொடி: வாலிபர் எஸ்.பி.,யிடம் புகார்
பார்சலில் மர்ம பொடி: வாலிபர் எஸ்.பி.,யிடம் புகார்
பார்சலில் மர்ம பொடி: வாலிபர் எஸ்.பி.,யிடம் புகார்
பார்சலில் மர்ம பொடி: வாலிபர் எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : ஆக 06, 2011 02:21 AM
கடலூர் : பெண்ணாடம் அருகே வாலிபரின் முகவரிக்கு வந்த பார்சலை பணம் செலுத்தி வாங்கி ஏமாற்றமடைந்தவர் எஸ்.பி., யிடம் புகார் செய்தார்.பெண்ணாடத்தை அடுத்த இறையூர், காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்தின்.
இவருக்கு கடந்த 3ம் தேதி பார்சல் ஒன்று வந்துள்ளதாகவும். அதை பணம் செலுத்தி பெற்று செல்லுமாறு போஸ்டாபீஸ் ஊழியர் தெரிவித்தார்.ஏற்கனவே இணையதளம் மூலம் பார்சல் பொருட்கள் வாங்கிய அனுபவம் ராஜேந்திரனுக்கு இருந்ததால் மொபைல் வேண்டி இணையதள முகவரிக்கு தகவல் அனுப்பியிருந்தார்.இதைதொடர்ந்து ராஜேந்திரன் போஸ்டாபீசிற்கு சென்று, 2100 ரூபாய் பணம் செலுத்தி பாசலை பெற்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்சலை பிரித்து பார்த்த ராஜேந்திரன் அதிர்ச்சியடைந்தார். இதில் காகிதத் துண்டுகளுடன் இரண்டு பாலிதீன் பாக்கெட்டுகளில் சீயக்காய் பொடி போன்ற தூள் பாக்கெட்டுகள் அதில் இருந்துள்ளது.பணத்தை பறிகொடுத்து ஏமாற்றமடைந்த ராஜேந்திரன், தன்னை போல் மற்றவர்களும் ஏமாற வேண்டாம் என்ற நோக்கில், எஸ்.பி.,பகலவனை சந்தித்து புகார் தெரிவித்தார். உடன் பார்சலில் வந்த பொருட்களை பெண்ணாடம் போலீசில் ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டுள்ளார். மேலும் பார்சலில் வந்த பொடி குறித்து, ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்ய மாதிரியை சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.