Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/வழித்தட தகராறு ஐந்து பேர் கைது

வழித்தட தகராறு ஐந்து பேர் கைது

வழித்தட தகராறு ஐந்து பேர் கைது

வழித்தட தகராறு ஐந்து பேர் கைது

ADDED : செப் 06, 2011 01:27 AM


Google News
வாழப்பாடி: வாழப்பாடி அருகே, கோஷ்டி மோதலில் ஈடுபட்ட இருதரப்பினர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், 5 பேரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி திருப்பதி(37). அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலுமணி(36) என்பவருக்கும் வழித்தட பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று அந்த வழித்தடத்தில் நடந்து சென்றதில், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ஆத்திரமடைந்த திருப்பதி அவரது உறவினர்களான தனசேகரன், சேட்டு, குமார், ராமலிங்கம் மற்றும் சிலருடன் சேர்ந்து கொண்டு, வேலுமணி மற்றும் அவரது உறவினரான முருகானந்தம் ஆகியோரை இரும்புக்கம்பியால் தாக்கி, கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். வேலுமணி அவரது உறவினர்களான முருகன், பழனிவேல், குமார் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு திருப்பதி இரும்புகம்பியால் தாக்கியுள்ளனர்.அந்த கோஷ்டி மோதலில் காயமடைந்த வேலுமணி, முருகானந்தம், திருப்பதி ஆகிய இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோஷ்டி மோதலில் ஈடுப்பட்டதாக இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீஸார், பழனிவேல், குமார், தனசேகரன், சேட்டு உள்ளிட்ட 5பேரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us