/உள்ளூர் செய்திகள்/கடலூர்/உடல் தானம் வழங்கிய தம்பதிக்கு பாராட்டுஉடல் தானம் வழங்கிய தம்பதிக்கு பாராட்டு
உடல் தானம் வழங்கிய தம்பதிக்கு பாராட்டு
உடல் தானம் வழங்கிய தம்பதிக்கு பாராட்டு
உடல் தானம் வழங்கிய தம்பதிக்கு பாராட்டு
ADDED : செப் 16, 2011 12:17 AM
சிதம்பரம்:அண்ணாமலைப் பல்கலை மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம் வழங்கிய
தம்பதிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.சிதம்பரம் கோவில் நகர ரோட்டரி
சங்கத்தில் மாவட்ட ஆளுனர் அசோகா வருகையொட்டி சிறப்பு நல உதவித் திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டன.நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவர் ஜான் கிறிஸ்டி
வரவேற்றார். செயலர் செந்தில் முருகன் சங்க செயல்பாடுகளை விவரித்தார்.
ரோட்டரி மாவட்ட துணை ஆளுனர் பஞ்சநதம் பல்வேறு பணித் திட்டங்களை
அறிமுகப்படுத்தினார்.
சிதம்பரத்தைச் சேர்ந்த கலியபெருமாள் இவரது மனைவி ராஜலட்சுமி. இருவரும்
கோவில் நகர ரோட்டரி மூலம் தங்கள் உடலை ராஜா முத்தையா மருத்துவக்
கல்லூரிக்கு தானமாக வழங்கினர். அவர்களை ஆளுனர் பாராட்டினார்.நிகழ்ச்சியில்
பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. மேலும், சிறந்த என்.எஸ்.எஸ்.,
அலுவலர் விருது பெற்ற மோகன்குமார், சிறந்த ஆராய்ச்சியாளர் விருது பெற்ற
அனந்தராமன், தைவான் கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரை சமர்பித்த குருஞானம்
ஆகியோருக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர்.


