Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

ADDED : அக் 03, 2011 10:54 PM


Google News

திருத்தணி : திருத்தணியில் வீட்டு கதவின் பூட்டை உடைத்து, எட்டரை சவரன் நகை மற்றும் 18 ஆயிரத்து, 500 ரூபாய் ரொக்கம் ஆகியவைகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.திடீரென மின் தடை ஏற்பட்டதால், காற்றுக்காக வீட்டின் உட்புறம், பின்புறம் கதவுகளை பூட்டி விட்டு வீட்டு வாசலில், குடும்பத்தினர் தூங்கிய சமயத்தில், இந்த துணிகர திருட்டு நடந்துள்ளது.திருத்தணியை அடுத்த, அகூர் காலனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சண்முகம், 64.

விவசாயியான இவர், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஏற்பட்ட மின் தடையால், காற்று வசதிக்காக, வீட்டின் இரு புறமும் கதவை பூட்டிக் கொண்டு, குடும்பத்தினருடன் வெளியில் படுத்தார்.மறுநாள் காலை 6.30 மணியளவில் வீட்டின் முன்பக்கக் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவின் கதவும் திறந்திருப்பதை கண்டு சண்முகம் அதிர்ச்சியடைந்தார்.பீரோவை பார்த்த போது, எட்டரை சவரன் நகை, ரொக்கம் 18 ஆயிரத்து, 500 ரூபாய் மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து, திருத்தணி போலீசில் சண்முகம் புகார் செய்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us