ADDED : செப் 19, 2011 01:21 AM
அந்தியூர்: அந்தியூர் அருகே உள்ள ஜி.எஸ். காலனியை சேர்ந்தவர் கருப்பன்
(80). அந்தியூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பறைக்கு சென்று விட்டு வெளியே
வந்தார்.
மேட்டூரில் இருந்து 'மாண்டி' பஸ் சர்வீஸூக்கு சொந்தமான பஸ், பஸ்
ஸ்டாண்டுக்குள் வந்தது. அந்த பஸ் கருப்பன் மீது மோதியதில் பலத்த
காயமடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை
பலனின்றி இறந்தார்.அந்தியூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.