மாணவிக்கு வன்கொடுமை இன்ஸ்பெக்டருக்கு ஜாமின் மறுப்பு
மாணவிக்கு வன்கொடுமை இன்ஸ்பெக்டருக்கு ஜாமின் மறுப்பு
மாணவிக்கு வன்கொடுமை இன்ஸ்பெக்டருக்கு ஜாமின் மறுப்பு
ADDED : ஆக 17, 2011 01:42 AM
மதுரை : திருச்சியில் பொறியியல் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் கண்ணன், கீழ் கோர்ட்டை அணுகும் வகையில் ஜாமின் மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி, திருச்சி பஸ் ஸ்டாண்டில் சொந்த ஊருக்கு செல்ல சில வாரங்களுக்கு முன் நின்றார். அப்போது மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணன், அவரை மிரட்டி காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கண்டித்து போராட்டங்கள் நடந்தன. கண்ணனை கன்டோன்மென்ட் போலீசார் கைது செய்தனர்.
கண்ணன் சார்பில் தாக்கலான ஜாமின் மனு நீதிபதி ஆர்.மாலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அவருக்கு ஜாமின் வழங்க கூடாது என ஐகோர்ட் வக்கீல்கள் ஸ்டாலின், வெங்கடேசன் உட்பட பலர் ஆட்சேப மனு செய்தனர். அரசு வக்கீல் ராமரும், ஆட்சேபம் தெரிவித்தார். பின், மனுவை வாபஸ் பெறுவதாக, மனுதாரர் வக்கீல்கள் தெரிவித்தனர். அதை பதிவு செய்து கொண்டு, மனுதாரர் கீழ்கோர்ட்டை அணுகும் வகையில், ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.