Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பெண் விரிவுரையாளர் கடத்தல்: நால்வர் கைது

பெண் விரிவுரையாளர் கடத்தல்: நால்வர் கைது

பெண் விரிவுரையாளர் கடத்தல்: நால்வர் கைது

பெண் விரிவுரையாளர் கடத்தல்: நால்வர் கைது

ADDED : செப் 01, 2011 09:01 PM


Google News

வத்தலக்குண்டு : கல்லூரி விரிவுரையாளரை கடத்திய மூன்று பெண்கள் உட்பட நான்கு பேரை வத்தலக்குண்டு போலீசார் கைது செய்தனர்.

பண்ணைக்காடு ஊரல்பட்டியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகள் நிவாஷினி,24. தேனி தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறார். இவரது உறவினர்களான ஆலடிப்பட்டியை சேர்ந்த திருமலைராஜா,35, அவரது சகோதரிகள் புவனேஸ்வரி,37, கோடீஸ்வரி,34, சித்ரா,39, ஆகியோர் நிவாஷினியை பெண் கேட்டு சென்றனர். இதற்கு தர மறுத்துள்ளனர். கட்டாய திருமணம் செய்வதற்காக, வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த நிவாஷினி, அவரது தாயார் சுசீலா ஆகியோரை காரில் ஊருக்குச் செல்லலாம் என அழைத்தனர். ஊருக்குச் செல்லாமல் கார் திண்டுக்கல் ரோட்டில் சென்றது. சுசீலாவை வழியில் இறக்கி விட்டு நிவாஷினியை கடத்திச்சென்றனர். வத்தலக்குண்டு போலீசார், திருமலைராஜா மற்றும் மூன்று பெண்களை கைது செய்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us