/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/மணல் லாரி மோதி ஒருவர் பலி புதிய தமிழகம் கட்சியினர் மறியல்மணல் லாரி மோதி ஒருவர் பலி புதிய தமிழகம் கட்சியினர் மறியல்
மணல் லாரி மோதி ஒருவர் பலி புதிய தமிழகம் கட்சியினர் மறியல்
மணல் லாரி மோதி ஒருவர் பலி புதிய தமிழகம் கட்சியினர் மறியல்
மணல் லாரி மோதி ஒருவர் பலி புதிய தமிழகம் கட்சியினர் மறியல்
ADDED : செப் 09, 2011 12:53 AM
ஓட்டப்பிடாரம் : ஓட்டப்பிடாரம் அருகே பைக் மீது மணல் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே கூலித்தொழிலாளி ஒருவர் பலியானார்.
இதன் எதிரொலியாக ஓட்டப்பிடாரம்-பாளையங்கோட்டை நெடுஞ்சாலையில் மணல் லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியினர் மணல் லாரிகளை மறித்து திடீர் மறியல் செய்தனர். ஓட்டப்பிடாரம் அருகே அக்காநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் ராமச்சந்திரன்(55). கூலித்தொழிலாளியான இவர் நேற்று அக்காநாயக்கன்பட்டியில் இரு ந்து மணியாச்சிக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது மணியாச்சி விலக்கு அருகே சென்று கொண்டு இருக்கும் போது வைப்பாற்றில் மணல் ஏற்றிக் கொண்டு பாளையங்கோட்டை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத லாரி பைக் மீது மோதி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இந்நிலையில் விபத்துக்கு காரணமான மணல் லாரி நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலர் வக்கீல் கனகராஜ், மாவட்ட துணைச் செயலர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், ஓட்டப்பிடாரம் தொகுதி இளைஞர் காங்., துணைத் தலைவர் முருகேசன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மணல் லாரிகளை மறித்து, ஓட்டப்பிடாரம்-பாளையங்கோட்டை நெடுங்சாலையில் மணல் லாரிகள் செல்லத் தடை விதிக்க வேண்டும் என மறியல் செய்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று மணியாச்சி டிஎஸ்பி., ராஜேந்திரன், மணியாச்சி இன்ஸ்பெக்டர் தனபாலன், ஓட்டப்பிடாரம் தாசில்தார் மணி உட்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மணல் லாரிகளை நிறுத்துவது குறித்து அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மணல் லாரிகளை உடனே நிறுத்த வேண்டும் என தொடர்ந்து மணல் லாரிகளை செல்லவிடாமல் மறியல் செய்து வருகின்றனர்.